1 / 1மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு .எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 4.3.2019 அன்று தலமைச் செயலகத்தில் , மீன்வளத் துறை சார்பில் அமைக்கப்பட்டடுள்ள மீன்பிடி துறைமுகம் , மீன் இறங்குதளங்கள், வலைபின்னும் கூடங்கள், மீன்குஞ்சு வளர்ப்பு மையக்கூடம் , சுய உதவிக்குழு மகளிர் பயிற்சி மையத்துடன் கூடிய சமையலறைக்கூடம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கட்டப்பட்டடுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வகக் கட்டடம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் - பள்ளப்பட்டியில் கால்நடை மருத்துவமனைக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள் . மேலும் , தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்படவுள்ள கூண்டுகள், தொழில்நுட்ப பூங்கா, மீன்வளப் பயிற்சி நிலையக் கட்டடம், கல்விக் கட்டடங்கள், நன்னீர் அலங்கார சினைமீன்கள் உற்பத்தி மையம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்கள்.
