Harnessing the Science of Fisheries for Food, Nutrition and LivelihoodTNJFU

Success Stories

நாலிட்டோபினேயஸ் வனாமி இறால் வளர்ப்பில் வெற்றிக் கதைகள் - 2

திரு. ளு.ஹ. சேவியர்

Farmer Profile

பெயர் : திரு. ளு.ஹ. சேவியர்

விலாசம் : த/பெ. ஆரோக்கியசாமி,
எண்.90/ஹ1, 2வது சாலை,
காவேரி நகர்,
மயிலாடுதுறை

செல் - 9486161101

நான் 2012ம் ஆண்டு முதல் இறால் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். நான் போதிய அனுபவம் இல்லாமல், அருகிலுள்ள இறால் பண்ணையாளர்கள் ஆகியோரின் அனுபவங்களைக் கேட்டு எனது பண்ணையில் இறால் வளர்ப்புச் செய்து வந்தேன்.

ஆனால் தொடர்ந்து இறால்களுக்கு ஏற்படும் வெள்ளைப்புள்ளி வைரஸ் நோய்த் தாக்குதலால் எனது பண்ணையும் பாதிக்கப்பட்டு மிகுந்த நஷ்டத்துக்கு ஆளானேன். இந்நிலையில் நான் கடந்த ஆண்டு (24.06.14 முதல் 10.7.14 வரை) மீன்வளத் தொழில்நுட்ப நிலையம், நாகப்பட்டினம் நடத்திய தொழில் முனைவோருக்கான இறால் வளர்ப்புப் பயிற்சியில் கலந்து கொண்டேன். அதில் 15 நாட்கள் இறால் வளர்ப்பிற்கான இடத்தேர்வு, உயிர்ப்பாதுகாப்பு முறைகள், குளத்தயாரிப்பு முறைகள், நீர்ப்பராமரிப்பு, தீவனம் மற்றும் தீவன மேலாண்மை முறைகள் காற்றூட்ட மேலாண்மை, தாதுஉப்புகள் மேலாண்மை மற்றும் இறால் வளர்பில் பிற புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அங்கு உள்ள ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எடுத்த வகுப்புகள் மூலமாகவும் மற்றும் பயிற்சியின் போது நேரடியாக பண்ணைகளுக்கு விஜயம் செய்தும் கற்றுணர்ந்து கொண்டேன்.

நான் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் ஒப்பந்த அடிப்படையில் இறால் பண்ணையை நடத்தி வந்தேன் அந்த பண்ணையில் பயிற்சியில் கற்றுக் கொண்ட கீழ்க்கண்ட மாற்றங்களை செய்தேன்.

குளங்களை நன்றாக உலரவைத்து இரண்டு முறை உழுதபின், நிலத்தின் மண்ணை சோதனை செய்து பின்னர் தேவையான தாது உப்புகளை இட்டு பின்னர் இறுதி உழவு செய்தேன். குளத்தைச் சுற்றிலும் நண்டு வலை மற்றும் பறவை விரட்டும் வலைகளை அமைத்தேன். மேலும் குளங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே சென்று வருவதற்கு ஒரே ஒரு வாயில் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். அதுமட்டுமல்லாது குளத்திற்கு நீரேற்றம் செய்ய உதவும் நீர்த்தேக்கத் தொட்டியை சுற்றிலும் நண்டு வலை மற்றும் பறவை விரட்டும் வலைகளை அமைத்தேன். மேலும் பண்ணையைச் சுற்றிலும் உள்ள அனைத்து நண்டு உறைவிடங்களையும் அழித்து விட்டேன். மேலும் குளத்தின் உள்ளே வருவோர் கைகால்களில் கிரும நீக்கம் செய்ய அதற்கான அமைப்புகளை ஏற்படுத்தினேன். அதன் பின்னர் முறையாக கிருமி நீக்கம் செய்யப்பட்ட பம்புகள் மூலம் மூன்று நிலைகளில் நீரை வடிகட்டி குளங்களுக்கு நீர் ஏற்றினேன். நீர் ஏற்றி மூன்று

நாட்கள் கழித்து மாலை வேளையில் குளோரின் பவுடர் கொண்டு குளநீரை முறையாக கிருமிநீக்கம் (வெள்ளைப்புள்ளி நோயை உண்டாக்கும் கிருமி) செய்து பின்னர் மூன்று நாட்கள் கழித்து நீரில் பச்சையம் நிலைப்பட ஏதுவாக உரங்கள் கொடுக்க ஆரம்பித்தேன். இந்நிலையில் பச்சையம் நிலைப்பட ஏதுவாக குளங்களில் காற்றூட்டிகள் அமைத்தேன். பின்னர் பச்சையம் குளத்தில் நிலைப்பட்டவுடன் கடலோர நீர்வாழ் ஒழுங்கு முறை ஆணையத்தால் (ஊஹஹ) அங்கீகரிக்கப்பட்ட குஞ்சு பொரிப்பகமான ஊஞ ஹளூரயஉரடவரசந குஞ்சு பொரிப்பகத்தில் இருந்து குறிப்பிட்ட நோய் அற்ற (ளுஞகு) இறால் குஞ்சுகளை இருப்பு செய்து அதனை நான் பயிற்சியில் கற்றுக் கொண்டபடி பராமரித்து வளர்த்து வந்தேன் 100 - 105 நாட்களில் நான் கீழ்க்கண்டவாறு குளங்களை அறுவடை செய்தேன்.

Farm Economics

நாஇறால் வளர்ப்பு பொருளாதாரம்

குளம் 1

குளத்தின் பரப்பு

1.5 ஹெக்டேர்

இருப்பு செய்த குஞ்சுகள்

5,00,000

இருப்பு அடர்த்தி

33.3 / மீ2

வளர்ப்புக்காலம்

100 நாட்கள்

தோராய உடல் எடை

20 கி.

மொத்த அறுவடை

8.500 கி.கி.

விற்பனை விலை / கி.கி.

380

உற்பத்தி செலவு / கி.கி.

270

இலாபம் / கி.கி.

110

குளம் 2

குளத்தின் பரப்பு

1 ஹெக்டேர்

இருப்பு செய்த குஞ்சுகள்

3,00,000

இருப்பு அடர்த்தி

30/ மீ2

வளர்ப்புக்காலம்

105 நாட்கள்

தோராய உடல் எடை

23 கி.

மொத்த அறுவடை

6250 கி.கி.

விற்பனை விலை / கி.கி.

410

உற்பத்தி செலவு / கி.கி.

275

இலாபம் / கி.கி.

135

இதற்கு முன்னால் நான் இறால் வளர்ப்பு செய்தபோதும் வெள்ளைப்புள்ளி நோய்த் தாக்குதல் காரணமாக எனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் மீன்வளத் தொழில்நுட்ப நிலையம், நாகப்பட்டினம் நடத்திய தொழில் முனைவோருக்கான இறால் வளர்ப்புப் பயிற்சியில் கலந்து கொண்டு அதில் கற்ற தொழில் நுட்பங்களை குறிப்பாக உயிர்ப்பாதுகாப்பு முறைகளை (க்ஷiடி ளநஉரசவைல அநயளரசநள) எனது பண்ணையில் நடைமுறைப்படுத்தியதால் எனது பண்ணையைச் சுற்றி உள்ள இறால் பண்ணையாளர்கள் நோய்ப் பாதிப்புக்கு உள்ளானபோதும் எனது பண்ணைக்கு நோய் பாதிப்பு ஏற்படாமல் இறால் வளர்ப்புச் செய்து இலாபம் ஈட்ட முடிந்தது.